கலைஞர் சமாதியில் மரியாதை செலுத்திய வைரமுத்து

vairamuthu-kalaignar

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணிக்கு கலைஞர் கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அவருடைய கோபாலபுரம் இல்லத்திலும், சி.ஐ.டி. காலணி இல்லத்திலும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் நேற்று காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நேற்று மாலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை தன்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன