பள்ளி சிறுமிகளுக்கு உதவிய வரலட்சுமி

varalakshmi

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது விஜயின் சர்கார்- 2, மாரி – 2, நீயா-2, சண்டக்கோழி-2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த போது அங்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிகளை தன்னுடைய காரில் அழைத்து சென்று இறக்கி விட்டிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன