பழம்பெரும் நடிகர் நீலகண்டன் காலமானார்

NEELU

பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெண்டு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  மாலை காலமானார்.

கடைசியாக இவர் சிம்பு நடிப்பில் வெளியான `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *