விஜய் 62 – முக்கிய அப்டேட்

Vijay-62

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.

சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு காட்சி ஒன்றை நள்ளிரவு படமாக்கி இருக்கிறார்கள். அந்த குண்டுவெடிப்பில் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுவது போல காட்சி அமைந்திருந்தது. மேலும் ஒரு மெலடி பாடலும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *