இரண்டு வருடத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

vijay-awards

சினிமா கலைஞர்களுக்கு வருடம்தோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது விஜய் டிவி. இதற்காக ‘விஜய் அவார்ட்ஸ்’ என்ற விழாவை நடத்துகிறது. இதுவரை 9 முறை நடந்த இந்த விழா, சிலபல காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக நடைபெறவில்லை.

ஆனால், இந்த வருடம் 10வது ஆண்டாக இந்த விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகிய ஐந்து பேரும் நடுவர்களாக இருந்து விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வருகிற சனிக்கிழமை பிரமாண்டமாக இந்த விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. நடிகர் – நடிகைகள் உள்பட சினிமாத்துறையினர் கலந்து கொள்ளும் இந்த விழாவில், அஞ்சலி, காஜல் அகர்வால், சயிஷா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *