ரஜினியை விட விஜய்தான் பெஸ்ட்- எஸ்.ஏ. சந்திரசேகர்

s-a-chandrasekar

இயக்குனரும், நடிகரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் படங்களில் ரஜினி நடித்த காலா படத்தை விட விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் சிறந்த படம் என கூறியுள்ளார்.

சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஜூன் 22ஆம் தேதி, அதாவது இந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு தற்போது மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறது.

அந்த வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

“அரசியல் படங்களில் ரஜினி நடித்த காலா படத்தை விட விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் சிறந்த படம். தன்னை விட விஜய்க்கு நன்றாக அரசியல் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன