மெர்சலுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்

vijay-in-mersal

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் விஜயுடன் சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் இப்படத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளுக்கு விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன