புதிய உச்சத்தைத் தொட்ட விஜய் பாடல்

விஜய் மூன்று வேடங்களில் நடித்து கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விவேக், அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடலாக இருந்தது. கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக் மற்றும் பூஜா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருந்தனர். கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதி இந்தப் பாடலின் வீடியோ யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இதுவரை 5 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன