நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன் – விஜய் சேதுபதி

தூத்துக்குடி சம்பவம் மட்டும் இல்லை மக்கள் போராட்டங்களுக்கு எல்லாம் தனது குரலை உறுதியாக தருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எனக்கு மக்கள் மீது அக்கறை இருக்கும் அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அதற்கான சிந்தனையும்கூட எனக்கு இல்லை.

அந்த அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்தில் போய் உட்காரக்கூடாது. ‘இங்கே நடப்பது சரி’ என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். சிலர் ‘தவறு’ என்று சொல்கிறார்கள். எனவே தெளிவான முடிவை நம்மால் எடுக்க முடியவில்லை.

ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்கள் அப்படி இல்லை. நிறைய தெளிவோடு செயல்படுகிறார்கள். அரசியல் அறிவோடு இயங்குகிறார்கள். அவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com