ரஜினியுடன் வில்லனாக நடிப்பது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

vijayrajini

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, அஞ்சலி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம் இப்படம் குறித்து கேட்டதற்கு தான் கார்த்தி சுப்புராஜுக்காக இப்படத்தில் நடிப்பதாகவும், நாற்பது ஆண்டுகளாக ரசிகர்களைப் புரிந்து கொண்டு நடித்து தன் பிடியில் வைத்திருக்கும் ரஜிகாந்த்தின் அருகில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்காக அவருடன் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன