குறும்படத்தின் போஸ்டரை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Vijay-Sethupathi-Released-Naadagamedai-Poster

நித்திலன் இயக்கத்தில் விதார்த் – பாரதிராஜா – டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குரங்கு பொம்மை’. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கியிருக்கும் குறும்படம் நாடகமேடை.

சமூகத்தில் மனிதம் மீது மனிதன் கொண்டுள்ள மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்த குறும்படத்தை கலை இயக்குனர் ஏழுமலை, ஆதிகேசவன் இணைந்து தயாரித்திருப்பதடன், அவர்களின் ஊர்நாடு திரைக்களம் மூலம் வெளியிடுகின்றனர். இது அவரின் தயாரிப்பில் வெளிவரும் ஆறாவது குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு தவிர்த்து படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ரஜினிமுருகன் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியவர்.

மனிதனின் உதவும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற கதைக்களம் கொண்ட இந்த குறும்பத்தின் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விரைவில் இந்த குறும்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *