எம்.ஜி.ஆர். போல விஜயும் தமிழ்நாட்டை ஆள்வார் – ராதாரவி

Vijay-RadhaRavi

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல் படம் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் ராதாரவி இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், ஜெயலலிதா இருந்த போதே பல விஷயங்களை தைரியமாக செய்ததால் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தவர் என்றும், எம்.ஜி.ஆரிடம் இருக்கும் சில குணங்களை வளர்த்து கொண்டால் நிச்சயம் எம்.ஜி.ஆர் போலவே வரலாம் என்றும், திரைத்துறையை ஆளும் விஜய் எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் ஆள்வார் என்றும் கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன