சிவகார்த்திகேயனுடன் போட்டியா ? – விஜய் சேதுபதி பதில்

Sivakarthikeyan-Vijay-Sethupathi

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி இடையே போட்டி நிலவியது. இந்த போட்டி காலப்போக்கில் ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு என்று உருவானது. தற்போது விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் இடையே உருவாகியுள்ளது. இதனை அவர்கள் வெளிப்படையாக கூறாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களிடையே பகிரங்கமாக தெரிகிறது.

இது குறித்து சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டபோது, தான் சிவகார்த்திகேயனுடன் நெருங்கிப் பழகியது இல்லை என்றும் அவரும் தானும் வெளியில் எங்கேயாவது சந்தித்தால் அன்பைப் பரிமாறிக் கொள்வோம் என்றும், அவர் தன்னைவிட வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும் மனிதர் என்றும், எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை இதுபோல இணையாக பார்த்துக்கிட்டு இருந்த மக்களுக்கு தற்போதும் ஒரு இணை தேவைப்படுகிறது. அதனால் தானாக உருவானதுதான் இந்த இணை என்றும் தாங்கள் உருவாக்கியது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன