கமலுடன் இணையும் விக்ரம்

kamal-vikram

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிட்டதாக ஜிப்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `மஹாவீர் கர்ணா’ என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன