விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டீஸர் வெளியீடு

vikram-dhruva-natchathiram

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய டீஸர் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி. மதன் மற்றும் கெளதம் மேனன் தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டு டீஸர்கள் ஏற்கனெவே இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் மற்றொரு டீஸர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன