சாமி ஸ்கொயர்க்காக பல வருடங்கள் காத்திருந்தோம் – விக்ரம்

Saamy-Square

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாமி ஸ்கொயர். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விக்ரம், இயக்குனர் ஹரி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விக்ரம் சாமி படம் தன்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படம் என்றும், தன்னை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய படம் என்றும், அதனால் ஹரிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல வருடங்கள் முன்பே முடிவெடுத்து விட்டதாகவும், நல்ல கதையாக உருவாக்கவே இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இப்படம் தில், தூள், சாமி படங்களை போன்று முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இப்படத்தில் விக்ரமும் கீர்த்தி சுரேஷும் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன