கேரளா வெள்ளத்திற்கு விராட் கோலி – அனுஷ்கா சர்மா உதவி

kohli-anushka

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

திரையுலகை சேர்ந்த பலரும் கேரளாவிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். விஜய் ரூ.70 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக தலா ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சம் பணத்தையும், நடிகை ரோகிணி ரூபாய் 2 லட்சம் பணத்தையும் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். நடிகர் சித்தார்த், தனுஷ்,பிரபு, ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள விலங்குகளை பாதுகாக்கவும் உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களின் இந்த செயலை பலரும் வரவேற்றுள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன