ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றிய விஷால்

Vishal

விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்த இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார்.

விஷாலின் பிறந்தநாளான நேற்று, பிறந்தநாள் விழாவையும் இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாவையும் சேர்த்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடினார். இதில் விஷால், இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ‘மக்கள் நல இயக்கம்’ ஆக மாற்றி அறிவித்தார். இவ்விழாவில் இதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் விவேகம், வித்தியாசம், விடா முயற்சி எனவும், அணி சேர்வோம் அன்பை விதைப்போம் என்றும் அவரது புகைப்படத்துடன் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

Vishal-Makkal-Nala-Iyakkam

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன