ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு விஷால் கண்டனம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விஷால் கூறியிருப்பதாவது,

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படட்டது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனை கருத்தில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சுயநலம் இல்லை. 50,000 பேர் கூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த ஊரின் நலனை கருத்தில் கொண்டே போராடுகிறார்கள்.

அன்பிற்குரிய பிரதமரே, அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள். போராட்டம் என்பதே ஜனநாயகம் தான் என்னும் போது, மக்கள் ஏன் அதை செய்யக் கூடாது.

இந்த அரசு மக்களுக்காகத் தான் செயல்படுகிறதா. 2019-ஆம் ஆண்டே விழித்துக் கொள். என்று கூறியிருக்கிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com