மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம் – விஷால்

Vishal

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தோல்வியடைந்துள்ளதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலர் ஆழ்ந்த இரங்கலையும், நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது.

நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விடும்’ இவ்வாறு அறிக்கை கூறப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *