கர்நாடகாவில் காலா வெளியாவது குறித்து இன்று முடிவு – விஷால்

Vishal-kaala-issue

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளா காலா படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய டிரைலர் வெளியாகிய நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

இதுகுறித்து கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறும்போது,

ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு.

இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்போம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் என பலரும் பேசியுள்ளோம். அது எங்களின் தனிப்பட்ட கருத்து, அதனால் படம் பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ரஜினி சார் அரசியல் வருவதில் தவறில்லை. படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே, மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு அவ்வளவுதான். எனவே இந்த பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு எட்டும் என்று நம்புகிறோம் என்றார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன