தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 2007 முதல் 2014 வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20.06.2018 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.7 – லட்சம் மானியம் வழங்கி அவர்களை கௌவித்த மாண்புமிகு. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் & அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறிப்பிட்டுள்ளார்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com