விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது

viswaroopam2

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது.

அந்நிலையில், இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்ற இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கமல் அரசியல் வருகைக்கு பிறகு ரிலீஸாக உள்ள படம் விஸ்வரூபம்-2 என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன