‘விஸ்வரூபம்-2’ மேக்கிங் வீடியோ

viswa2

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன