வைரலாகும் விஸ்வரூபம்-2 பாடல்

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. ‘சாதி மதம்’ என்று தொடங்கும் இப்பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். நேற்று மாலை வெளியிடப்பட்ட இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com