விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தீவிரம்

viswasam

அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.

இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆனது.

வரும் போது வரட்டும். படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஐதராபாத்தில் தயாராக இருந்த அரங்கில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த உள்ளனர்.

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால், வருகிற தீபாவளியை அஜித் படத்துடன் கொண்டாடலாம் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *