உலகளவில் டிரெண்ட் ஆன ‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக்

viswasam_fl

சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்து நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு மிகச்சரியாக திட்டமிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியான ஒரு சில நிமிடங்களில் தமிழக அளவிலும் அதன் பின்னர் இந்திய அளவிலும் சிறிது நேரத்திற்கு முன்னர் உலக அளவிலும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தை குறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பபதால் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கும் அதை உறுதி செய்துள்ளது. மேலும் தந்தை மகன் என இரண்டு அட்டகாசமான லுக், அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன