அஜித்துக்கு விவேக் ஓபராய் வாழ்த்து

ajith-vivek oberoi

அஜித் சினிமாவில் நுழைந்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அஜித். அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்த இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட்டில் அஜித் கையெழுத்திட்டு இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன.

அதைக் கொண்டாடும் வகையில், அஜித் ரசிகர்கள் பல்வேறு ட்வீட்டுகளைப் பதிந்து வருகின்றனர். இந்தி நடிகர் விவேக் ஓபராய் “26 ஆண்டுகள் என்னுடைய நண்பா, லெஜண்டாக மிகச்சிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர். பல்வேறு மறக்க முடியாத செயல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய் என்று நிச்சயமாகக் கூறமுடியும். எனக்கு ‘விஸ்வாசம்’ இருக்கா” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். விவேக் ஓபராய் அஜித்துக்கு வில்லனாக விவேகம் படத்தில் நடித்திருந்தார். மேலும் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன