நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

YSR

தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம் பெற்று உள்ள ‘ஹை ஆன் லவ்..’ பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் பெருக்கிக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடதக்கது.

யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது, ‘இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம்.

பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது ‘பேய் பசி’ படத்துக்கு மிக பெரிய பலம்.

கதாநாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *