எஸ்.பி.பியின் உடல்நிலை!

திரைத்துறையில் பின்னணி பாடகராக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சீரியஸான நிலையில் இருந்தார். இந்நிலையில் திரு.எஸ்.பி.பி. ஆபத்து நிலையை தாண்டிவிட்டதாகவும், கொரோனா சிகிச்சையில் அவருக்கு நெகட்டீவ் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சில நோய் தொற்றுகளால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் ஆபத்து நிலையை கடந்துவிட்டதாக தகவல் வெளிவர அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், தற்போது அவர் மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக எஸ்.பி.பியின் மகன் கூறியுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com