கதாபாத்திரத்துக்காக தொப்பையை கூட்டியிருக்கிறார் நிவின்பாலி

மலையாளத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் நிவின்பாலியும் ஒருவர். இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கிலும் பெண் ரசிககைகள் அதிகம். பிரேமம் படத்தில் இவரது மேனரிசம் பல இளைஞர்களுக்கும் சொந்தமான மேனரிசமானது.

nivin-pauly-padavettu-photo
nivin-pauly-padavettu-photo

வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் நிவின் பாலி, அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் திரைப்படங்களில். இதுவும் இவரது வெற்றிக்கு காரணம் எனலாம். தற்போது மலையாளத்தில் பட வேட்டு என்கிற திரைப்படத்தில் நடித்துவருகிறார் நிவின்பாலி.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு தொப்பை இருப்பது போல் காட்ட வேண்டும். உடல் எடையை கூட்டுவது என்பது எளிது ஆனால் இதற்காக நிவின்பாலி தொப்பையை வரவைக்க வேண்டும். இந்த கதாபாத்திரத்துக்காக தொப்பையை கூட்டியிருக்கிறார் நிவின்பாலி.

தற்போது படக்குழுவினர் இவர் தொப்பையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.
இதில் மற்றோரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் அருவி திரைப்படத்தில் நடித்த அதிதி பாலன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை லீஜு கிருஷ்ணா அவர்கள் இயக்கி வருகிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com