சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லும் கீர்த்தி சுரேஷின் தந்தை

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படங்களும் வெளிவர முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மற்றவர்களைவிட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை பெற்றிருக்கிறார்கள். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய நபரும்மான சுரேஷ் குமார் அவர்கள், நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

கிட்டத்தட்ட மலையாளத்தில் 26 படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில உள்ளன. படப்பிடிப்புகள் பாதியுடன் நிறுத்தப்பட்ட இருப்பதால் தயாரிப்பாளர்கள் பொருளாதார பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கு பிரச்சனை சீராகி எப்பொழுது நார்மலான சூழல் திரும்பும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை, நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அவர்களது சம்பளத்தில் 50 சதவீதம் குறைத்து கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்படி செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களுக்கு www.cineicons.com/keerthy-suresh

Share

2 thoughts on “சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லும் கீர்த்தி சுரேஷின் தந்தை

  1. நடிகைகளையும் குறைச்சுக்க சொல்லலாமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com