பிறந்த நாள் வாழ்த்துடன் வாய்ப்பை பெற்ற மாளவிகா மோகனன்!

தனுஷின் பிறந்தநாள் வெகு சிறப்பாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகில் அனைத்து நடிகர், நடிகைகளும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான “மாளவிகா மோகனன்” தனது டுவிட்டர் பக்கம் மூலம் தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தங்களுடன் இணைந்து பணிபுரிய மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் ஏதேனும் ஒரு படம் நம் இருவரையும் ஒன்றாக இணைக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள தனுஷின் 43 வது படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com