மே 1 தல அஜித் பிறந்த நாள்

மே 1 தல அஜித் பிறந்த நாள் ஆகும். ஆனால், ரசிகர்களை பொறுத்தவரை அன்று தான் தீபாவளி, பொங்கல் போன்று, ஏதோ பண்டிகை நாட்களைப்போல கொண்டாடுவார்கள். வாட்ஸ்அப் ஸ்டேடஸ், டீபி, சமூக இணையத்திலும் சரி தலயின் பிறந்தநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த முறை கொரோனாவால், அஜித்தின் பிறந்தநாளன்று அஜித் பட ஸ்பெஷல் ஷோ பார்க்க முடியாது மற்றும் பல கொண்டாட்டங்களும் ரத்தாகி இருக்கிறது.

எப்போதும் ரசிகர்கள் தெருக்களில் தங்களின் நாயகர்களின் பிறந்தநாளை கொண்டாடும் அதே நேரத்தில் இணையத்திலும் வெகுவாக கொண்டாடுவார்கள் அன்று ஒரு நாள் காமன் டீபி என்று ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் அனைவரும் ஒரே படத்தை டீபியாக வைத்து இருப்பார்கள்.

இந்த காமன் டீபி சில நேரங்களில் பிரபலங்களாலும் லாஞ்ச் செய்யப்படும். வரவிருக்கும் தல பிறந்தநாள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது இணையதள அஜித் ரசிகர்கள் இணைந்து தற்போது உருவாக்கியிருக்கும்.

இது போன்று பெரிய அளவிலான பிரபலங்கள் பிறந்தநாள் காமன் டீபியை ஒரே நேரத்தில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இதிலும் மிக முக்கியமான விஷயம் காமன் டீபியை வெளியிட போகும் பிரபலங்களும் ஏதோ சிறு திரை நட்சத்திரங்கள் கிடையாது. ஆமாம் அனைவரும் மக்களுக்கு மிகவும் பிடித்த பெரிய நட்சத்திரங்கள் தான் .

அதாவது வரும் தல பிறந்தநாளுக்கு உருவாக்கியிருக்கும் காமன் டீபியை கிட்டதட்ட 14 பிரபலங்களை வைத்து லாஞ்ச் செய்ய உள்ளனர் என்பது தான் கூடுதல் சிறப்பு அனைத்து பிரபலங்களும் ஒரே நேரத்தில் காமன் டீபியை லாஞ்ச் செய்ய உள்ளனர்.

இந்த காமன் டீபியை வெளியிடபோகும் அந்த பிரபலங்கள் அருண்விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் தான் தல பிறந்தநாளுக்கான காமன் டீபியை வெளியிடுபவர்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com