திரையரங்குகளில் ‘ஓம்’ வெளியான அதே வாரத்தில், ஓடிடி தளங்களிலும் பல புதிய படங்கள் வரிசைகட்டியுள்ளன. இந்த வார இறுதியில் வீட்டிலிருந்தே பார்க்கக்கூடிய முக்கிய ரிலீஸ்கள் இதோ:
ஹைக்கூ — நெட்ஃபிளிக்ஸ் (நவ. 20)
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கிய ரொமான்டிக் டிராமா. ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா (‘கோர்ட்’ படத்துக்குப் பிறகு தமிழில் அறிமுகம்), ஃபெமினா ஜார்ஜ் நடித்துள்ளனர். இசை விஜய் புல்கானின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் கிடைக்கிறது.
ட்ரோன்ஸ் — பிரைம் வீடியோ (நவ. 20)
ராகவ் மிர்தாத் இயக்கிய ஃபேன்டஸி ஹாரர்-காமெடி. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி நடித்துள்ளனர். இசை ஹரி எஸ்.ஆர்.
418 — நெட்ஃபிளிக்ஸ் (நவ. 20)
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் வழங்கும் தெலுங்கு ஹாரர் த்ரில்லர்; தமிழிலும் கிடைக்கிறது. கீர்த்தன் நாடகவுடா இயக்குநராக அறிமுகம். சைத்ரா ஜே. ஆச்சாரின் நடிப்பு பாராட்டப்படுகிறது. (A சான்றிதழ்)
கிரேஸி கல்யாணம் — ஆஹா (நவ. 20)
அனுபமா பரமேஸ்வரன், வி.கே. நரேஷ், தருண் பாஸ்கர் நடித்த குடும்ப காமெடி டிராமா; தமிழ் பதிப்பும் உண்டு.
மிஸ்டர் & மிஸஸ் ஆஃபீஸ் — ஜியோஹாட்ஸ்டார்
பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை நடித்த அலுவலக காமெடி தொடர். ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வெளியாகின்றன.
அசோக் செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’ சோனி லிவ் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
தகவல்: Filmibeat.