‘சூப்பர் டீலக்ஸ்’, ‘கோப்ரா’, ‘எனிமி’, ‘ரோமியோ’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மிருணாளினி ரவிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை அவர் மணந்துள்ளார்.
நவம்பர் 15 அன்று மலேசியாவின் லங்காவி தீவில் இந்து முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் இதில் பங்கேற்றனர்.
திருமணப் புகைப்படங்களை மிருணாளினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மிருணாளினி நடிப்பில் கடைசியாக 2024-ல் ‘ரோமியோ’ படம் வெளியானது.
தகவல்: Daily Thanthi, Dinamalar