புதன்கிழமை, நவம்பர் 18, 2026
Breaking
Cinema

அமெரிக்க ஐடி வேலையை விட்டு சினிமாவுக்கு — துல்கர் சல்மான் படத்தில் அறிமுகமாகும் சாத்விகா வீரவல்லி

அமெரிக்காவில் ஆரக்கிள் நிறுவனப் பணியை விட்டு, துல்கர் சல்மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் சாத்விகா வீரவல்லி.

Share
SATVIKA VEERAVALLI – ஐடி வேலையை விட்டு துல்கர் சல்மான் படத்தில் அறிமுகம்

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ (ஏஒடி) படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் சாத்விகா வீரவல்லியின் பின்னணி கவனம் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர், ஆரக்கிள் நிறுவனத்தில் சீனியர் கன்சல்டன்ட் மற்றும் புராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றி வந்தவர்.

இரண்டு பொறியியல் பட்டங்கள் பெற்றுள்ள சாத்விகாவுக்கு, மென்பொருள் மற்றும் ஹெல்த்கேர் தொழில்நுட்பத் துறையில் நான்கு ஆண்டு அனுபவம் உள்ளது. நடிப்புக்காக அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார்.

வேலையை விடும்போது பதற்றமாக இருந்ததாகவும், படப்பிடிப்பு தொடங்கியதும் அந்தப் பயம் மறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தில் சுருதி ஹாசன் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். படம் நவம்பர் 20 அன்று தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

தகவல்: Dinamalar

Share

Join the conversation

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன