ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15, 2026
Breaking
Cinema

‘இரண்டு வானம்’ ரிலீஸ் எப்போது? — விஷ்ணு விஷால் – மமிதா பைஜு படத்தின் தேதி குறித்து குழப்பம்

‘ஜெயிலர் 2’ காரணமாக அக்டோபர் 23-லிருந்து தள்ளிப்போன ‘இரண்டு வானம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Share
IRANDU VAANAM – விஷ்ணு விஷால் – மமிதா பைஜு படம் எப்போது?

‘ராட்சசன்’ வெற்றிக் கூட்டணியான இயக்குநர் ராம் குமார் – விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். காதல் பின்னணியிலான இப்படம் முதலில் அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ‘ஜெயிலர் 2’ உடனான மோதலைத் தவிர்க்க ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. புதிய தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத நிலையில், சில திரை இணையதளங்கள் வெவ்வேறு தேதிகளைக் குறிப்பிடுகின்றன; நவம்பர் 26 அன்று வெளியாகலாம் என்ற பேச்சும் உள்ளது.

படக்குழு

சத்யஜோதி பிலிம்ஸ் (செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு, சான் லோகேஷ் படத்தொகுப்பு. அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டதும் அப்டேட் செய்கிறோம்.

தகவல்: M9 News, Filmibeat

Share

Join the conversation

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன