கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கோர்ட்ரூம் டிராமா ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படம் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.
கொலை வழக்கில் சிக்கிய தன் கணவர் தீபக்கை (சாருகேஷ்) காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடும் இளம் வழக்கறிஞராக கீர்த்தி நடிக்கிறார். எதிர்த்தரப்பில் மூத்த வழக்கறிஞர் மார்க்கண்டேயனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளது டிரெய்லரின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர்
புதுமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் கதை எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசை, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு.
தகவல்: OnlyKollywood