வரவேற்பைப் பெற்ற சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் தொடரான ‘பொலிமேரா’வின் மூன்றாம் பாகத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இணைந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவில், அவர் ‘விராவி’ என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கும் இப்படத்தின் கிளிம்ப்ஸ், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான அர்ஜுனின் வருகை, இப்படத்துக்குத் தமிழிலும் கவனம் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தகவல்: Kollywood Reporter