ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15, 2026
Breaking
Cinema

‘மிஸ்டர் & மிஸஸ் ஆஃபீஸ்’ — நவம்பர் 18 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் புதிய தமிழ் காமெடி தொடர்

பிரதீப் ஆண்டனி – ஸ்மேகா மணிமேகலை நடிக்கும் அலுவலக காமெடி தொடர் நவம்பர் 18 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகளாக வெளியாகிறது.

Share
MR & MRS OFFICE – நவம்பர் 18 முதல் ஜியோஹாட்ஸ்டாரில்

புதிய தமிழ் வெப் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆஃபீஸ்’ நவம்பர் 18 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் நான்கு எபிசோடுகள் வெளியாகும்.

பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி, ஸ்மேகா மணிமேகலை ஆகியோர் அறிவு – ஐஸ்வர்யா என்ற இளம் தம்பதியாக நடிக்கின்றனர். உறவினர்கள் ஒன்றாக வேலை செய்யக் கூடாது என்ற விதி உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இருவரும் சேர, தங்கள் திருமணத்தை மறைத்து அலுவலகத்தில் அந்நியர்களாக நடிக்க வேண்டிய நிலை — இதுவே கதையின் சுவாரஸ்யம்.

மகிழ் திருமேனி நடிப்பில்

சனம் ஷெட்டியுடன், ‘தடம்’, ‘கலகத் தலைவன்’, ‘விடாமுயற்சி’ படங்களின் இயக்குநர் மகிழ் திருமேனியும் இத்தொடரில் நடித்துள்ளார். அப்துல் கபீஸ் இயக்கியுள்ள இத்தொடரை ஜகன் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இளம் பணிபுரியும் தம்பதிகளின் பணப் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்களையும் இத்தொடர் நகைச்சுவையுடன் பேசுகிறது.

தகவல்: Kollywood Reporter

Share

Join the conversation

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன