நடிகை ஷ்ருதி ஹாசன் புதிய தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, 2023-ல் வெளியான ‘அஸ்வின்ஸ்’ படத்தின் இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார்.
‘மாவீரன்’, ‘3BHK’ படங்களைத் தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு தேதி, ரிலீஸ் தேதி மற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷ்ருதி ஹாசன் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’, பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அவரது கடைசி தமிழ் திரையரங்க ரிலீஸ் ‘கூலி’ ஆகும்.