விஷால் – இயக்குநர் சுந்தர் சி மீண்டும் இணைந்துள்ள ‘புருஷன்’ திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் விநியோகத்தில் சிக்கலை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுந்தர் சி இயக்கத்தில் நவம்பர் 6 அன்று வெளியான நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ இந்தியாவில் சுமார் ₹24 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘புருஷன்’ படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இதனால், ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் ஃப்ரீ-டிஸ்ட்ரிபியூஷன் முறையில் படத்தை வெளியிட படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பென்ஸ் மீடியா சார்பில் ஏ. அருண் குமார் தயாரிக்கும் இப்படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்; ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இது குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.